/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறை உணவு தரம் : ஆய்வுக்கு உத்தரவு; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சிறை உணவு தரம் : ஆய்வுக்கு உத்தரவு; உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறை உணவு தரம் : ஆய்வுக்கு உத்தரவு; உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறை உணவு தரம் : ஆய்வுக்கு உத்தரவு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 28, 2024 06:34 AM
மதுரை: திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் முகமது தாரிக் தாக்கல் செய்த மனு: எனது சகோதரர் ஆசிக் முகமது. போக்சோ வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ளார். அவரை சந்தித்தேன். அவர்,'கைதிகளுக்கு சரிவர உணவு வழங்குவதில்லை. உணவு தரமற்றதாக உள்ளது,' என்றார். அவரது உடல்நலம் பாதித்தது. கைதிகளுக்கு உணவு வழங்க தமிழக அரசு ரூ.26 கோடி ஒதுக்கியுள்ளது. அச்சிறையில் 5 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். கைதிகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை. 24 மணிநேரத்திற்கு பதிலாக குறைந்தளவு நேரம் பணிபுரிகின்றனர். போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை.
சரியான முறையில் தரமான உணவு வழங்க வேண்டும். மருத்துவ வசதி செய்ய வலியுறுத்தி தமிழக உள்துறை (சிறைத்துறை) முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு: திருநெல்வேலி மத்திய சிறையில் அம்மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் 3 நாட்கள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

