/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கார் கவிழ்ந்து தனியார் வங்கி ஊழியர் பலி
/
கார் கவிழ்ந்து தனியார் வங்கி ஊழியர் பலி
ADDED : நவ 25, 2024 04:54 AM

கள்ளிக்குடி : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் செல்லும் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே ரோட்டோர தடுப்பில் கார் மோதி கவிழ்ந்ததில் தனியார் வங்கி ஊழியர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.
திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த சிவா 24, இவரது நண்பர்கள் விஷ்ணு 24, அபூபக்கர் சித்திக் 24, ஆலங்குளத்தை சேர்ந்த அஜித்குமார் 25, ஆகிய நான்கு பேரும் தனியார் வங்கியில் மதுரையில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு குற்றாலம் செல்ல நான்கு பேரும் முடிவு செய்துள்ளனர். விருதுநகரில் உள்ள மற்றொரு நண்பரையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு இரவு 11:30 மணிக்கு காரில் சென்றனர். காரை சிவா ஒட்டிச் சென்றார்.
கள்ளிக்குடி ஆவல்சூரன்பட்டி சோதனை சாவடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். விஷ்ணு, அபுபக்கர் சித்திக், அஜித் குமார் காயம் அடைந்தனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.