sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 உயர்கல்வி சேர்க்கை இடஒதுக்கீடு வழங்க கோரி பட்டினிப் போராட்டம் உதவிபெறும் தனியார் பள்ளிகள் அறிவிப்பு

/

 உயர்கல்வி சேர்க்கை இடஒதுக்கீடு வழங்க கோரி பட்டினிப் போராட்டம் உதவிபெறும் தனியார் பள்ளிகள் அறிவிப்பு

 உயர்கல்வி சேர்க்கை இடஒதுக்கீடு வழங்க கோரி பட்டினிப் போராட்டம் உதவிபெறும் தனியார் பள்ளிகள் அறிவிப்பு

 உயர்கல்வி சேர்க்கை இடஒதுக்கீடு வழங்க கோரி பட்டினிப் போராட்டம் உதவிபெறும் தனியார் பள்ளிகள் அறிவிப்பு


ADDED : பிப் 19, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி சேர்க்கையில் இடதுக்கீடு வழங்க கோரி மாநில அளவில் உதவிபெறும் தனியார் பள்ளிகள் சார்பில் பிப்.,21ல் பட்டினிப் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்த பின் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவும், அப்பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீடு அளித்து 2020ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் போர்க்கொடி துாக்கினர்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதி இதையடுத்து 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், 'இடஒதுக்கீட்டை 7.5 சதவீத்தில் இருந்து 10 ஆக உயர்த்தி, 2.5 சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்' என அறிவித்தது. ஆனால் தற்போது வரை வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றவில்லை.

2026 சட்டசபை தேர்தல் அறிவிப்புக்குள் உள்ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அறிவிக்க கோரி பிப்.,21ல் மாநில அளவில் உதவிபெறும் தனியார் பள்ளிகள் இந்த பட்டினிப் போராட்டத்தை நடத்துகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் கூட்டமைப்பு செயல் தலைவர் கனகராஜ் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. உயர்கல்வி சேர்க்கை இடஒதுக்கீட்டில் உதவிபெறும் பள்ளி மாணவர்களை வேறுபடுத்தி பார்ப்பது தி.மு.க., குறிப்பிடும் சமூக நீதிக் கொள்கைக்கு அழகல்ல. தமிழக அரசு உள்ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்க கோரி பிப்.,21 அனைத்து மாவட்டங்களில் இப்போராட்டம் நடக்கிறது. சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us