UPDATED : அக் 11, 2026 04:09 PM
ADDED : அக் 11, 2026 04:06 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியில் கே. பி. அனைத்து விளையாட்டு குழு சார்பில் பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், சிறந்த சேவையாற்றியோருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஸ்ரீமான் எஸ்.ஆர். வி. மக்கள் நல மன்றத் தலைவர் ஜி. அய்யல்ராஜ் தலைமை வகித்தார் . விளையாட்டுக் குழுச் செயலாளர் பாஸ்கர்பாண்டி வரவேற்றார். வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் விடுதலை வேள்வியில் வ.உ.சி எனும் தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
ஓய்வு தலைமை ஆசிரியர் கீதா, கவுன்சிலர்கள் விஜயா, இந்திரா காந்தி, மதுரை லேபர் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசெல்வம், ஹார்வி மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏணி அமைப்பின் தலைவர் மீனாட்சி சுந்தரம், சமூக ஆர்வலர் ஸ்ரீராம், ஹார்விபட்டி அரவிந்தன் சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுக் குழுத் தலைவர் ராஜகோபால், பொருளாளர் முத்துராஜ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ரவிச்சந்திரன், நாகராஜ், அசோக், ரஞ்சித்குமார் ஒருங்கிணைத்தனர்.
