நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் நைனார் ஜும்மா தொழுகை பள்ளிவாசலில் மதர்ஷா மார்க்க கல்வி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர்முகமதுஉசேன் வரவேற்றார். அஜ்ரத் தஜ்பீர்நைனார்மஸ்பலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மாணவர்களின் சிறந்த தேர்ச்சியை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் அக்பர்அலி, துணைத் தலைவர் ஜாகிர்உசேன், துணைச் செயலாளர் நாசர்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

