தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில நல்லாசிரியர் விருது ஆசிரியர்களுக்கு 'சோதனை'  : விண்ணப்ப பரிசீலனையில் சிக்கல்

 மாநில நல்லாசிரியர் விருது ஆசிரியர்களுக்கு 'சோதனை'  : விண்ணப்ப பரிசீலனையில் சிக்கல்

 மாநில நல்லாசிரியர் விருது ஆசிரியர்களுக்கு 'சோதனை'  : விண்ணப்ப பரிசீலனையில் சிக்கல்


UPDATED : ஆக 12, 2026 10:42 PM

ADDED : ஆக 12, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 10:42 PM ADDED : ஆக 12, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் 50 சதவீத விண்ணப்பங்கள் முழுமை பெறவில்லை. அவற்றை பரிசீலிக்க முடியவில்லை என கருத்து எழுந்துள்ளது.

செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கு ஜூலை 17 முதல் ஆக.,6 வரை இவ்விருதுக்கு ஆயிரத்திற்கும்மேல் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.

தற்போது மாவட்ட அளவில், சி.இ.ஓ., தேர்வுக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்கிறது. முதற்கட்டமாக டி.இ.ஓ.,க்கள் பரிசீலனையில் அந்தந்த மாவட்டங்களில் 50 சதவீதம் விண்ணப்பம் 'பார்சியலி கம்ளிட்டட்' என்ற நிலையில் உள்ளன. அவற்றை 'ஓபன்' செய்ய முடியவில்லை. அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

விண்ணப்பித்த ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்தாண்டும் ஆன்லைனில் தான் விண்ணப்பித்தோம். அப்போது பி.இ.ஓ., (வட்டார கல்வி அலுவலர்), டி.இ.ஓ., சி.இ.ஓ., என 3 நிலைகளில் பரிசீலிக்கப்பட்டது. இந்தாண்டு நேரடியாக டி.இ.ஓ.,- சி.இ.ஓ., பரிசீலனை மட்டும் நடக்கிறது. இதில் பலரது விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. தொழில் நுட்ப சிக்கல் ஏற்பட்டிருந்தால் வெளிப்படையாக அதிகாரிகள் விளக்க வேண்டும். கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விடுபடாமல் மீண்டும் சரிசெய்து முழுமை பெற வைத்து பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us