நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ள தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக வாகனத்தை தாசில்தார் மனேஷ்குமார் தொடங்கி வைத்தார். திருமங்கலத்தில் பஸ் ஸ்டாண்ட், விருதுநகர் ரோடு, சந்தைப்பேட்டை, மார்க்கெட் பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வி.ஏ.ஓ.,க்கள் பாலமுருகன், ஆனந்த் கலந்து கொண்டனர். இந்த செயல்முறை விளக்கம் தொடர்ந்து திருமங்கலம் தாலுகாவின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் என தாசில்தார் மனேஷ்குமார் தெரிவித்தார்.

