ADDED : அக் 08, 2024 04:54 AM
மதுரை : அரசு வேளாண் உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தோட்டக்கலைத் துறையிலும் பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதுரை மாவட்டத்தில் ரூ.18 லட்சம் செலவில் பல பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. முருங்கைப் பரப்பு விரிவாக்கத்திற்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம், செடி வகைகளுக்கு பந்தல் அமைக்க ரூ.3 லட்சம், வாழைக்கு முட்டுக்கட்ட ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளனர்.
மதுரை கிழக்கு ஒன்றியம் உலகநேரி விவசாயி மகேஷ் கூறுகையில், ''8 ஏக்கர் தரிசு நிலத்தை பண்படுத்தி 8 முதல் 10 வகை காய்கறி சாகுபடி செய்கிறேன். பந்தல் சாகுபடியில் பாகற்காய், பீர்க்கு, புடலங்காய், சுரைக்காய், கோவக்காய் பயிரிடுகிறேன். ரூ.1.80 லட்சம் மானியம் கிடைத்தது. இதில் ஆண்டு வருவாய் ரூ.3.35 லட்சம், இதில் நிகர லாபமாக ரூ.1.99 லட்சம் கிடைத்தது'' என்றார்.
