sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சிறுதானிய உற்பத்தியை பெருக்க திட்டம்

/

 சிறுதானிய உற்பத்தியை பெருக்க திட்டம்

 சிறுதானிய உற்பத்தியை பெருக்க திட்டம்

 சிறுதானிய உற்பத்தியை பெருக்க திட்டம்


ADDED : டிச 21, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் சிறுதானிய பரப்பளவை அதிகரிக்கும் வகையில் 13 ஒன்றியங்களில் சிறுதானிய விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடத்துவதாக வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அதிகபட்சமாக உசிலம்பட்டியில் சிறுதானிய சாகுபடி இருந்தது. தற்போது பரப்பளவு குறைந்து விட்டது. சிறுதானிய பயிர்களில் காரீப், ரபி பருவத்திற்கு 34ஆயிரத்து 403 எக்டேர் பரப்பளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு பருவத்திலும் சேர்த்து 30ஆயிரத்து 414 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய விதைகளுக்கு விதை மானியம் வழங்கப்படுகிறது.

காரீப், ரபி பருவத்திற்கான பயறுவகை பயிர்களுக்கு 9300 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது 5665 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துகளுக்கான 3062 எக்டேர் இலக்கில் 1452 எக்டேரும் பருத்திக்கான 7014 எக்டேர் இலக்கில் 2997 எக்டேரும், கரும்புக்கான 1862 எக்டேர் இலக்கில் 1811 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2025 - 26 க்கான குறுவை, சம்பா, கோடை, காரீப், ரபி பருவத்திற்கான நெல் விதைகள் 2077.78 டன் அளவிற்கு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அரசு வேளாண் விரிவாக்க மையம், தனியார் விற்பனை மையங்களில் சான்றுபெற்ற நெல் விதைகள் 322 டன், சிறுதானியங்கள் 42 டன், பயறு வகைகள் 28 டன், எண்ணெய் வித்துகள் 3.72 டன், பருத்தி 15 டன் விதைகள் இருப்பில் உள்ளன என்றார்.






      Dinamalar
      Follow us