/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாடுபிடி வீரர் உடலை வாங்க மறுத்து போராட்டம்
/
மாடுபிடி வீரர் உடலை வாங்க மறுத்து போராட்டம்
ADDED : ஜன 16, 2025 05:14 AM
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறந்த வீரர் நவீன்குமார் 23, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று முதல் போராட்டம் துவங்கினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விளாங்குடியை சேர்ந்த நவீன்குமார் மாட்டை அடக்கும் போது காயமடைந்து உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்த அவரது தந்தை பூமி, தாய் அம்சவள்ளி, சகோதரி ஆர்த்தி, உறவினர்கள் விளாங்குடி மெயின் ரோட்டில் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
இறந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

