ADDED : செப் 20, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோடங்கி தோப்பு தெருவில் வசிக்கும் 150 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்கக்கோரி தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் 1946 முதல் வசித்து வருகிறோம். ஆரம்ப முதல் கோயிலுக்கு வாடகை செலுத்தி வருகிறோம். கோடாங்கி தோப்பு தெருவில் வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி பட்டா வழங்காமல் உள்ளனர். நீண்ட காலமாக எங்களுக்கு பட்டா வழங்க கோரி வருவாய் துறையினரிடம் பல்வேறு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
