தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியில் போராட்டம்

 அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியில் போராட்டம்

 அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியில் போராட்டம்


ADDED : பிப் 05, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அண்ணா பல்கலை உறுப்புக் கல்லுாரியில் தற்காலிக தொகுப்பூதிய உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கோரி அவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் துவக்கினர்.

மாநில அளவில் இப்பல்கலைக்கு உட்பட்ட 16 உறுப்புக் கல்லுாரிகளில் 328 உதவி பேராசிரியர்கள் மாதம் ரூ.27 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. 17 ஆண்டுகளாக பணியில் தொடரும் இவர்களுக்கு 2025 டிச.,31ல் பணிக்காலம் முடிந்த பின் நீட்டிப்பு வழங்கவில்லை. இதனால் சம்பளம் கிடைக்கவில்லை. இதை கண்டித்து மதுரை உள்ளிட்ட உறுப்புக் கல்லுாரிகளிலும் தொடர் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை உறுப்புக் கல்லுாரியில் போராடுவோர் கூறுகையில், இப்பணியில் 17 ஆண்டுகளாக தொடர்கிறோம். பணி நிரந்தரம் கோரி நீதிமன்றம் உத்தரவு பெற்றும் பல்கலை பதிவாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. பணி நீட்டிப்பு வழங்கி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us