ADDED : மே 10, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; குருவித்துறை அய்யப்பநாயக்கன்பட்டியில் மே 5ம் தேதி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து வரும் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
ஒரு தரப்பை சார்ந்த விஜயலட்சுமி, மகன் கார்த்திக் தாக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று உறவினர்கள், வெள்ளாளர்முன்னேற்ற கழக மகளிரணி தலைவி ஷகிலா தலைமையில் ஒரு மணி நேரம் மறியலில்ஈடுபட்டனர்.
சோழவந்தான் - பேரணை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், எஸ்.ஐ., சிவக்குமார் சமரசம் செய்தனர்.