UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:07 PM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி பேயம்பட்டியைச் சேர்ந்தவர் மணியம்மாள் 68.
இவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும், குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து விட்டதாகவும் கூறி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று காலை உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்த அவர், தாசில்தார் அறைக்குச் செல்லும் வழியில் பாயை விரித்துபடுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் சமரசம் செய்ய முயற்சித்தும் அரை மணிநேரத்திற்கும் மேலாக எழுந்திருக்க மறுத்தார். பின்னர் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் சமரசம் செய்து அழைத்துச் சென்றனர்
