ADDED : பிப் 27, 2024 06:44 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சார்பில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 'சம வேலைக்கு சம ஊதியம்' வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், இதுதொடர்பாக சென்னையில் நடக்கும் போராட்டத்தின்போது ஆசிரியர்களை கைது செய்வதையும் கண்டித்து சி.இ.ஓ., அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அருளானந்தர், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் தாமஸ் விட்லம் உள்ளிட்டோர் பேசினர். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பினர். கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
