/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலக வாயிலில் போராட்டம்
/
கலெக்டர் அலுவலக வாயிலில் போராட்டம்
ADDED : ஜூலை 09, 2025 06:38 AM
மதுரை : மதுரையில் காதுகேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் நேற்று கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெறச் சென்றால் நிரந்தர ஊனத்திற்கு தற்காலிக சான்று வழங்குகின்றனர். சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற மாற்றுத்திறனாளியை மிரட்டியுள்ளனர். எனவே டாக்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சொர்ணவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன், கவுன்சிலர் குமாரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.