ADDED : மார் 14, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: மதுரை திருநகர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் டிஜாங்கோ. இவர் திருமங்கலம் நீதிமன்றத்திற்கு தினமும் வருவது வழக்கம். திருமங்கலம் பகுதியினருக்கு டோல்கேட்டில் கட்டணம் கிடையாது. எனவே காரில் கப்பலுார் டோல்கேட்டை கடந்து செல்லும் போது, ஒவ்வொரு முறையும் வழக்கறிஞர் சங்க அடையாள அட்டையை காண்பித்து சென்று வந்தார்.
நேற்று கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் கூறினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ராஜேஷ்குமார் காரை டோல்கேட்டிலேயே நிறுத்திவிட்டு, பஸ்சில் புறப்பட தயாரானார். ஊழியர்கள் அவரை தடுத்து காரில் அனுப்பி வைத்தனர்.
