ADDED : ஜூலை 27, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஆரம்பப் பள்ளியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு 150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் லதா மங்கேஷ்கர் வரவேற்றார். மன்ற துணைத் தலைவர் காளிதாசன் எழுது பொருட்கள் வழங்கினார். நிர்வாகிகள் அண்ணாமலை, அரவிந்தன், விளையாட்டுக் குழுத்தலைவர் பாஸ்கர்பாண்டி கலந்து கொண்டனர். ஆசிரியர் மேகலா நன்றி கூறினார்.