ADDED : ஜன 30, 2026 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்தவர், சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தார்.
இதுகுறித்து புகார் செய்தும் பலனில்லாததால் நேற்று பெட்ரோல் கேன்களுடன் கிராம மக்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் 'பிப். 2 ல், அப்பகுதியில் நில அளவை செய்யும் பணிக்காக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அன்று நடவடிக்கை எடுக்கப்படும்' என சமரசம் செய்தனர்.

