/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காய்கறி சந்தையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை பொதுமக்கள் புலம்பல்
/
காய்கறி சந்தையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை பொதுமக்கள் புலம்பல்
காய்கறி சந்தையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை பொதுமக்கள் புலம்பல்
காய்கறி சந்தையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை பொதுமக்கள் புலம்பல்
ADDED : ஏப் 17, 2025 06:20 AM

மேலுார்:' மேலுார் காய்கறி சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நகராட்சி அலுவலகம் அருகே ரூ.7.87 கோடியில் புதிய தினசரி சந்தை 2024 செப்.,ல் பயன்பாட்டிற்கு வந்தது. இச்சந்தையில் 44 கடைகள், 90 தரைக் கடைகள் என மொத்தம் 134 கடைகள் உள்ளன. இங்கு போதுமான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. மார்க்கெட் வளாகத்திற்குள் பேவர் பிளாக் கற்களை அடுக்கி வைத்தும், கட்டுமான கழிவுகளை கொட்டியும் தனிநபர் ஆக்கிரமித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் இளங்கோவன் கூறியதாவது : சுகாதாரமற்ற முறையில் ஓரிடத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆண், பெண்களுக்கென தலா ஒரு கழிப்பறை உள்ளது. டூவீலர் பார்க்கிங் வசதி இல்லை. ஏழே மாதங்களில் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு சிமென்ட் பூச்சு பெயர்ந்துள்ளது. தகர ஷெட் கூரையால் சந்தைக்குள் அதிக வெப்பம் ஏற்பட்டு வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடையின் மாடிப்பகுதி பயன்பாடு இல்லாததால் புழுதி படிந்துள்ளது.
வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பையை பெயரளவில் அகற்றுவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றார்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''சுவரில் இரண்டு துாண்களுக்கு நடுவே ஏற்பட்ட வெடிப்பு, கனரக வாகனத்தால் சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு சரி செய்யப்படும். கூடுதலாக குடிநீர் தொட்டி வைக்கப்படும். சந்தையில் வெப்பத்தை வெளியேற்ற கூடுதலாக பேன் அமைக்கப்படும் என்றார்.