தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு உயர, கடை தாழ அவதியில் பொதுமக்கள்

 ரோடு உயர, கடை தாழ அவதியில் பொதுமக்கள்

 ரோடு உயர, கடை தாழ அவதியில் பொதுமக்கள்


ADDED : ஏப் 16, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: 'வடகாடுபட்டியில் புதிய ரோடால் பள்ளமான ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்' என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

இங்கு பெருமாள்கோயில் தெருவில் விக்கிரமங்கலம் ரோட்டருகே ரேஷன் கடை அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் சில நாட்களுக்கு முன்பு வனத்துறையின் இடத்தில் 150 மீ., நீளத்திற்கு 'பேவர்பிளாக்' கற்கள் அமைத்து புதிதாக தார்ரோடு அமைக்கப்பட்டது.

இதனால் ரோட்டின் உயரம் அதிகரித்து ரேஷன்கடை பள்ளமாகிவிட்டது. ரோடு, கடைக்கு இடையேயான பகுதி குண்டும் குழியுமாகவும், கரடுமுரடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் கடைக்கு வருவோர் தடுமாறி விழுகின்றனர். பொருட்களை வாங்கிச் செல்லவும் சிரமப்படுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us