தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கலங்கிய குடிநீரால் கலங்கும் பொதுமக்கள்

 கலங்கிய குடிநீரால் கலங்கும் பொதுமக்கள்

 கலங்கிய குடிநீரால் கலங்கும் பொதுமக்கள்


ADDED : ஏப் 01, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் சாக்கடை கலந்த குடிநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த மார்நாட்டான் கூறியதாவது: முள்ளிப்பள்ளம் வ.உ.சி, தெற்கு தெருக்களின் ஊராட்சி குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக, துர்நாற்றத்துடன் வருகிறது.

சாக்கடை கலந்து கருப்பு நிறமாக மாறி விட்டதால் சகிக்க முடியவில்லை. ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தபின், உவர்ப்பு நீர் விநியோகிக்கப்படுகிறது. இதையும் குடிக்க முடிய வில்லை. பலர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''வைகை ஆற்றில் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் மோட்டார் பம்பின் 'அடியில் உள்ள வால்வு' பிரச்னையால் இதுபோல நிகழ்கிறது. கிணற்றின் அடிப்பகுதி கசடு தண்ணீருடன் கலந்து விடுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் சரியாகி விடும்'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us