ADDED : ஜன 04, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 'மோகனிலிருந்து மகாத்மா வரை' என்னும் தலைப்பில் காந்திய காலண்டர் வெளியீட்டு விழா நடந்தது. கதர் நண்பர்கள் மன்றச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார்.
காந்தி நினைவு நிதி கல்விப் பிரிவு இயக்குநர் ஆண்டியப்பன், காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி காலண்டரை வெளியிட்டனர்.
மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் ஜெயபாலன், பொருளாளர் ராமகிருஷ்ணன், மண்டல அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர். நினைவு நிதி செயலாளர் சரஸ்வதி, காப்பாட்சியர் நடராஜன், பேராசிரியை ஜான்சி வனிதா மணி, இயற்கை ஆர்வலர் சோமசுந்தரம், வக்பு வாரிய கல்லுாரி வரலாற்றுத் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.