/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பில் புதுார் கல்குளம் கண்மாய்
/
ஆக்கிரமிப்பில் புதுார் கல்குளம் கண்மாய்
ADDED : ஜன 19, 2024 05:12 AM

புதுார்: மதுரை புதுார் கல்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு, முட்புதர், கழிவுநீர் என சிக்கி தவிக்கிறது.
வண்டியூர் கண்மாய்க்கு சாத்தையாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் கோசாகுளம் கண்மாய்க்கு வரும். அதிலிருந்து வெளியேறும் நீர் கல்குளம் கண்மாய்க்கும் வந்து சேரும். பரப்பளவு 9.06 ஏக்கர். குடிசைமாற்று வாரியம், பர்மா அகதிகள், இலவச பட்டா வழங்கியது போக மீதமுள்ள 2.32 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்கண்மாய் ஆக்கிரமிப்பு, முட்புதர் என குறைந்துகொண்டே போகிறது.
ஜான் பிரிட்டோ: 40 ஆண்டுகளாக கண்மாய் துார்வாரப்படவில்லை. புதுார், டி.ஆர்.ஓ., காலனி, ராமவர்மா நகர், சங்கர் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இக்கண்மாய் துார்வாரப்பட்டு தண்ணீர் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆக்கிரமிப்பு அகற்றி கண்மாயை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

