ADDED : ஆக 31, 2026 01:13 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து எழுமலை வழியாக எம்.கல்லுப்பட்டி செல்லும் ரோட்டின் 2 பக்கங்களிலும் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கும் இந்தப் பனை மரங்களில் இருந்து கோடை சீசனில் கிடைக்கும் நுங்குகளை இளைஞர்கள் ஆர்வமுடன் பறித்து உண்பர்.
இரு ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்து விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
பலத்த காற்று வீசுவதால் தனியாக நிற்கும் பனைமரங்கள் காய்ந்து வாழ்விழந்து வருகின்றன.
அதிகளவில் நெருக்கமாக உள்ள பனைமரங்கள் மத்தியிலும் சில காய்ந்து பட்டுப்போய் வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தாலும் வறட்சியைத் தாங்கும் பனைமரங்களே பட்டுப்போகும் அளவுக்கு இப்பகுதியில் வறட்சி தாண்டவமாடத் துவங்கிவிட்டது.
