ADDED : பிப் 29, 2024 05:49 AM
அ நிறம் | அளவு
மதுரை, : உசிலம்பட்டி மன்மதன் 48. தேனி மாவட்டம் கம்பம் மணி 44. இருவரும் 2016 ல் ஒரு லாரியில் 300 கிலோ கஞ்சாவை கடத்தியபோது உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் தேனி போதைப் பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.
