ADDED : செப் 29, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மேலக்கால் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.
இங்கு செப்.22ல் செவ்வாய் சாற்றுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று தீச்சட்டி, பால்குடம், பறவைக் காவடி, கரும்புத் தொட்டில் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை வைகையாற்றில் இருந்து கரகம் எடுத்தல், முளைப்பாரி, கும்மிப்பாட்டு நடந்தது.
இன்று செப்.30 மாவிளக்கு ஊர்வலம் நடக்கவுள்ளது. நாளை அக்.1 ல் முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடையும்.
