ADDED : ஆக 25, 2026 04:02 PM
மதுரை: மதுரை கே.புதுாரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கை ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு மேல்படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
இங்கு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அண்ட் நெட்ஒர்க் மெயின்டனன்ஸ், பிட்டர், ரோபோடிக்ஸ், இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டனன்ஸ், இன்டீரியர் டிசைன், டெகோரேஷன், மெஷினிஸ்ட், மானுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆட்டேமேஷன், டெக்னீசியன் அண்ட் மெகானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ், பேக்கர் அண்ட் கன்பேக்ஷனரி (மாற்றுத்திறனாளிகள் மட்டும்) போன்றவற்றில் சில சீட்களே உள்ளன.
இதில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படும். தமிழக அரசின் மாத உதவித்தொகை ரூ.750, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ. ஆயிரம், இலவச பஸ்பாஸ், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், அடையாள அட்டை வழங்கப்படும்.
இதுதொடர்பாக govtitimadurai@yahoo.in அல்லது 94990 55749 ல் தொடர்பு கொள்ளலாம் என, துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
