/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொங்கல் பரிசுக்கு கரும்பு கொள்முதல்
/
பொங்கல் பரிசுக்கு கரும்பு கொள்முதல்
ADDED : ஜன 04, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக வழங்கப்படவுள்ள கரும்புகளை விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் செய்ய உள்ளது.
விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி கூடுதலாக அரசுக்கு கொடுத்து லாபம் சம்பாதிக்கின்றனர். அதனால் நேரடி கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது.
கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி கூறுகையில், ''மார்க்கெட்டிங் சொசைட்டி மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படும்'' என்றார்.