ADDED : ஜன 24, 2025 04:41 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் பிரிவில் லத்திகா முதலிடம், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தர்ஷினி முதலிடம் பெற்று மாநில போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
மாணவிகள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேக்கப் தேவானந்த், அரவிந்த், கதிர்வேல்பாண்டியன் ஆகியோரை தலைமையாசிரியர் சூசைமாணிக்கம், பொருளர் செல்வமணி, உதவித் தலைமையாசிரியர் அருள்ஜோசப் பாராட்டினர்.
