/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குவாரி விதிமீறல் வழக்கு விருதுநகர் கலெக்டர் ஆஜர்
/
குவாரி விதிமீறல் வழக்கு விருதுநகர் கலெக்டர் ஆஜர்
ADDED : செப் 25, 2024 04:04 AM
மதுரை : விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி குவாரி விதிமீறல் வழக்கில் கலெக்டர் ஜெயசீலன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்.
வத்திராயிருப்பு அருகே மேலக்கோட்டையூர் கருப்பசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:வெம்பக்கோட்டை அருகே பனையடிபட்டியில் கிராவல் மற்றும் கருங்கற்கள் வெட்டி எடுக்க ஒருவருக்கு 2018ல் அரசு உரிமம் வழங்கியது. சட்டத்திற்கு புறம்பாக மலையை குடைந்து கிரானைட் கற்களை எடுத்துள்ளனர். அனுமதித்த அளவைவிட அதிக கற்களை எடுத்துள்ளனர். அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துள்ளனர். கனிம கழிவுகளால் விவசாய நிலம், நிலத்தடி நீர்பாதித்துள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. கலெக்டர் ஜெயசீலன் ஆஜரானார்.
நீதிபதிகள்: இவ்விவகாரம் தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தொடர்பாக பதில் மனுவை தயாரிக்கும்போது அதை கவனமாக சரிபார்த்து கையெழுத்திட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தி அக்.1க்கு ஒத்திவைத்தனர்.