நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : டாஸ்மாக் நிர்வாகத்தில் மேலாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் சோதனை நடத்தப்பட்டது.
மதுக் கடைகளில் நிர்ணயித்த விலையில் பாட்டில்களை விற்கின்றனரா என ஆய்வு செய்தனர். மதுரை வடக்கு மாவட்டத்தில் மேற்பார்வையாளர்கள் சுரேஷ், பொன்முத்துமாரி, தெற்கு மாவட்டத்தில் மேற்பார்வையாளர்கள் சக்திமோகன், சுப்ரமணியன் ஆகியோர் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நால்வரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.