/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்குறுதி குறித்து முதல்வருக்கு கேள்வி
/
வாக்குறுதி குறித்து முதல்வருக்கு கேள்வி
ADDED : ஜன 24, 2025 04:46 AM
மதுரை: ''முதல்வர் ஸ்டாலின் 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறிவிட்டு, தற்போது 381 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக கூறுகிறார். இதில் எது உண்மை'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதற்கு ஆதாரம் உண்டா என பழனிசாமி கேட்டதற்கு பதில் கூற முடியாமல், 525 தேர்தல் வாக்குறுதிகளில், 381 ஐ நிறைவேற்றி விட்டேன் எனப் பேசி இருக்கிறார். அப்படியானால் எது உண்மை.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நிலையில் இல்லை. உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. மத்திய அரசிடம் நிதி பெற முடியாமல் பிறர் மீது பழியை சுமத்துவது எந்த விதத்தில் நியாயம். சொந்த மண்ணிலே அகதிகளாக போய்விடுவோமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்த மேலுார் விவசாயிகளை சந்திக்க முதல்வருக்கு நேரம் கிடைக்கவில்லையா. 'நீட்' தேர்வு முதல் நீர் மேலாண்மை வரை உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.
வசைபாடுவது மூலம் உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளலாம். உண்மையை மறைத்து விடலாம் என நினைத்தால் அதை மக்கள் ஒருபோது ஏற்கமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

