/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளிக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.14 லட்சம் பறிமுதல்

ADDED : செப் 28, 2024 05:38 AM
கள்ளிக்குடி : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் மூன்றரை மணி நேர சோதனையிட்டு கணக்கில் வராத ரூ.1.14 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த அலுவலகத்தில் கூடுதல் பணம் பெற்று அரசு வழிகாட்டி மதிப்பின்படி பத்திரங்கள் பதிவு செய்வதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. நேற்று மாலை 6:30 மணிக்கு டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரகுரு, ரமேஷ்பிரபு, பாரதிப்ரியா உள்ளிட்டோர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொறுப்பு சார்பதிவாளர் புஷ்பலதா பணியில் இருந்தார். அவரிடம் விசாரணை நடந்தது. அங்குள்ள பதிவு வைப்பறையில் இருந்து கணக்கில் வராத ரூ.53 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அறை பீரோவில் இருந்து ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.