/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
96 மதுபெட்டிகள் பறிமுதல் ரயில்வே ஊழியர்கள் கைது
/
96 மதுபெட்டிகள் பறிமுதல் ரயில்வே ஊழியர்கள் கைது
ADDED : அக் 12, 2025 05:16 AM
திருமங்கலம்: பேரையூர் தாலுகா குப்பல் நத்தத்தைச் சேர்ந்தவர் கணேசன் 42. திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் அவரை மத்திய நுண்ணறிவு பிரிவு மதுரை மண்டல இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் விசாரித்த போது, இருவரிடமிருந்து மதுபான 'பவுச்' கொண்ட பாக்ஸ்களை வாங்கியது தெரிந்தது.
இதுதொடர்பாக சேடப்பட்டி தாலுகா கே. ஆண்டிப்பட்டி செல்லப்பாண்டி 38, பேரையூர் தாலுகா சந்தையூர் சபரிநாதன் 28, கணேசன் 42, ஆகியோரை கைது செய்து 96 மதுபான பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.
இதில் செல்லப்பாண்டி, சபரிநாதன் இருவரும் ராமேஸ்வரம் - அயோத்தி ரயிலில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் என தெரியவந்தது.
அயோத்தியில் இருந்து குறைந்த விலையில் மதுபான பாக்ஸ்களை வாங்கி அதிக விலைக்கு விற்கலாம் என கணேசன் அவர்களுக்கு பணம் அனுப்பி வாங்கி வரச்செய்தது தெரிந்தது.