ADDED : மார் 02, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தானில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷனை பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார்.
மண்டல முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் மகேஷ் தலைமை வகித்தார். துணைத் பொறியாளர் கார்த்திக் வரவேற்றார். கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ், இணை தலைமை மருத்துவர் கிரிபிரகாஷ் முன்னிலை வகித்தனர். முதுநிலை தலைமை பொறியாளர் சூரியமூர்த்தி நன்றி கூறினார்.
