ADDED : மார் 20, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே பொறியாளர், போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கு புதிய பயிற்சி மைய கட்டடம் கட்டப்படுகிறது.
மதுரை, விருதுநகரில் செயல்பட்டுவரும் பயிற்சி மையங்களுக்கு பதிலாக திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் ரூ.ஐந்தரை கோடி ரூபாயில் பயிற்சி மைய புதிய கட்டடமும், பயிற்சி பெற வரும் பணியாளர்கள் தங்குவதற்கு அருகில் விடுதி கட்டடமும் கட்டும் பணி நடக்கிறது.
