தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கால்நடைகளுக்கு கை கொடுத்த மழை

கால்நடைகளுக்கு கை கொடுத்த மழை

கால்நடைகளுக்கு கை கொடுத்த மழை


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் பகுதியில் ஒரு மாதமாக பெய்த மழையால் கால்நடைகளுக்கான தீவனங்கள் முளைத்து வளர்ந்துள்ளதால், கால்நடை வளர்ப்போர் நிம்மதி அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலும் உள்ளது. கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கூடுதல் பணியாக இதில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆறு மாதமாக மழை இல்லாததால் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் பசுந்தீவனங்கள், தண்ணீர் கிடைக்காமல் தவித்தன.

கறவை மாடுகளுக்கு இருப்பில் இருந்த வைக்கோல், செயற்கை தீவனங்களை கொடுத்து பராமரித்தனர். ஆடுகளை நீண்ட துாரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். கோடையில் அனைத்தும் கருகிய நிலையில் தண்ணீர், பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாதமாக இப்பகுதியில் பரவலாக பெய்த மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள், களைச் செடிகள் தளிர்த்துள்ளன. ஓடைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தண்ணீர் பிரச்னையும் தீர்ந்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us