தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் இடி மின்னலுடன் மழை

மதுரையில் இடி மின்னலுடன் மழை

மதுரையில் இடி மின்னலுடன் மழை


ADDED : ஆக 25, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை மதுரையின் பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பகல் முழுதும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

மாலை 6:45 மணிக்கு மேல் அவனியாபுரம், பெரியார், காளவாசல், ஆரப்பாளையம், நாகமலை, பல்கலை நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ரோட்டில் மழைநீர் தேங்கியது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மி.மீ.,): கள்ளந்திரி 28.5, சிட்டம்பட்டி 25.2, மதுரை வடக்கு 15.2, தல்லாகுளம் 13.6, பெரியபட்டி 13, இடையபட்டி 5, புலிப்பட்டி 1.6, சாத்தையாறு அணை 30, மேட்டுப்பட்டி 20, ஆண்டிப்பட்டி 2.4, சராசரியாக 7.02 மி.மீ., மழை பதிவானது.

அணையில் நீர்மட்டம்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135.25 அடி (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 5929 மில்லியன் கனஅடி. நீர்வரத்து 876 கனஅடி. வெளியேற்றம் ஆயிரம் கனஅடி.

வைகை அணை நீர்மட்டம் 69.21 அடி (மொத்த உயரம் 71 அடி). நீர் இருப்பு 5626 மில்லியன் கனஅடி. நீர்வரத்து 591 கனஅடி. வெளியேற்றம் 969 கனஅடி.

சாத்தையாறு அணை நீர்மட்டம் 5 அடி (மொத்த உயரம் 29 அடி). நீர் இருப்பு 2.85 மில்லியன் கனஅடி. நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us