/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமர் பாண்டி உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
/
ராமர் பாண்டி உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
ADDED : பிப் 23, 2024 06:14 AM
கரூர் : கொலையான ராமர் பாண்டி உடலை, அவரது உறவினர்கள் வாங்க மறுத்து விட்டதால், நான்காவது நாளாக உடல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 38; தேவேந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.
கடந்த, பிப்.,19ல் கரூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு டூவீலரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பிரிவு பகுதியில் சென்றபோது, காரில் வந்த கும்பல், ராமர் பாண்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ராமர் பாண்டியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இக்கொலை தொடர்பாக, முதுகுளத்துார் நீதிமன்றத்தில், 5 பேர் சரண் அடைத்தனர். போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது அவர்கள், 'கொலைக்கு துாண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால்மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்' என்றனர்.
நேற்றும் அவரது உடலை வாங்க மறுத்து விட்டு, உறவினர்கள் சொந்த ஊருக்கு திருப்பி விட்டனர். இதனால், 4வது நாளாக, ராமர் பாண்டியின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.