ADDED : ஜன 09, 2024 05:47 AM

மதுரை : ராமரும் தர்மமும் ஒன்றுதான் என்பது மஹாபெரியவர் வாக்கு என இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.
மதுரை பெசன்ட்ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் நேற்று காலை மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை நடந்தது. பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம்நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை ராமரும் பெரியவரும் என்ற தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.
அவர் பேசியது:
ஜன.,22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கஉள்ளது. ராம நாம மகிமை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ராம நாமம் பற்றி மஹா பெரியவர் பல இடங்களில் கூறியுள்ளார்.
ராம நாம மகிமையை இருவர் சிறப்பாக கூறியுள்ளனர்.
முதலாமவர் பீஷ்மர். அவரால் உபதேசிக்கப்பட்ட விஷ்ணு சகஸ்ர நாமத்தில் ராம நாம மகிமை மிகச் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. யுத்த களத்தில் பீஷ்மரால் கூறப்பட்ட விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்படிகமாலையால் கிரகிக்கப்பட்டு சகாதேவனால் நமக்கு தரப்பட்டது.
மற்றொருவர் பத்ராசலராமதாசர். கலியில் தர்மப்படி வாழ இயலாமல் துர்புத்தி, துரோகம், களவுபோன்ற குணங்கள் தடுத்துவிடும். கலி என்கிற இரண்டு எழுத்தைஜெயிக்க குரு என்பவரை பற்றிக்கொண்டு ராம நாமத்தை சொல்லவேண்டும்.
'ராமஜெயம் என்று கூறினால் தர்மத்துக்கு ஜெயம் என கூறுவதாகும். அதாவது ராம என்பது தர்மம் என்று பொருள் படுகிறது' என மஹா பெரியவர் கூறியுள்ளார்.
தேவர்கள் நம் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலும் தேவர்களால் உற்று நோக்கப்படுகிறது. ஆகையால் தர்ம காரியங்கள் செய்ய வேண்டும். வேத மந்திரங்கள் கூறி அக்னி மூலமாக ஆஹுதி செய்வதால் சரியான காலங்களில் மழை பொழிந்து நம்மை வாழ வைப்பார்கள்.
ராமாயணத்தில் ராமன் ஜெயிப்பதை நாம் விரும்புவது தர்மம் ஜெயிப்பதை நாம் விரும்புவது போல உள்ளது. நாம் தெரியாமல்ஒரு தவறு செய்தால் தெரிந்து இரண்டு நல்லது செய்தால் பரிகாரமாகும் என மஹா பெரியவர் கூறியுள்ளார். ஆகையால் நாம் என்றும் மஹா பெரியவரைவணங்கி அவருடைய அருள் உரைகளின் படி சிறப்பாக வாழ வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஏற்பாடுகளை மடத்தின்தலைவர் டாக்டர் டி. ராமசுப்பிரமணியன், செயலாளர் எல்.வெங்கடேசன், பொருளாளர் எஸ்.வெங்கடரமணி, நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கே.ஸ்ரீகுமார், வீ.ஸ்ரீ. ராமன், ஆர்.பரத்வாஜ், ஸ்ரீதர், சங்கரன் உள்ளிட்டோர் செய்துஇருந்தனர்.