ADDED : டிச 29, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: எழுமலை பாரதியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ராமகிருஷ்ணர் - சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநில மாநாடு டிச. 26 முதல் 3 நாட்கள் நடந்தது. துவக்கநாளில் மாநாட்டு கொடியேற்றம், தீபஆரத்தியுடன் ஆத்மகனானந்த மகராஜ் துவக்கி வைத்தார். மாநாட்டுக்குழுத் தலைவர் பொன் கருணாநிதி வரவேற்றார். பேலுார் அகில உலக ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் காணொளி மூலம் ஆசி வழங்கினார்.
சுவாமி சிவானந்த, பெருமாள் முன்னிலை வகித்தனர். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சத்யஞானானந்த மகராஜ் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ராமகிருஷ்ண மடங்களின் தலைவர்கள் பங்கேற்று ராமகிருஷ்ணர் , சாரதாதேவி, விவேகானந்தர் குறித்து பேசினர்.

