ADDED : மார் 21, 2026 07:26 AM
மதுரை: கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம் - கர்நாடக மாநிலம் ஹூப்ளி இடையே கோடை கால சிறப்பு ரயிலை தென் மேற்குரயில்வே அறிவித்துள்ளது.
ஏப்.,5 முதல் மே 31 வரை (ஞாயிறு தோறும்) காலை 6:50 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07355), மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.மறுமார்க்கத்தில் ஏப். 6 முதல் ஜூன் 1 வரை (திங்கள் தோறும்) இரவு 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07356), மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி செல்லும்.
ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பனஸ்வாடி, தும்கூர் வழியாக செல்லும். ஒரு 'ஏசி' முதல் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் இயக்கப்படுகிறது.
மாற்றுப் பாதை ஜோலார்பேட்டை அருகே தானியங்கி சிக்னல் நிறுவும் பணி காரணமாக நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., ரயில் மார்ச் 24ல் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் (16340), கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்துார், ஜோலார்பேட்டைக்கு பதிலாக திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.
