UPDATED : ஆக 01, 2026 05:48 PM
ADDED : ஆக 01, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளின் ஆதார் விபரங்களை, பயனாளிகளின் கை விரல் ரேகை அடிப்படையில்( இ-கே.ஒய்.சி.) சரிபார்ப்பு மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 2023 அக்., முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு நடைபெறுகிறது.
இ-கே.ஒய்.சி., பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு இன்று (ஆக.,2) மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. விடுபட்டவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
