ADDED : ஜூலை 16, 2025 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் நரியம்பட்டியில் இடியும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
கழுவன்: ரேஷன் கடை செயல்பட்டு வரும் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் கூரை விரிசல் அடைந்து உறுதி தன்மையை இழந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலை உள்ளது. விரிசல் வழியாக மழைநீர் ஒழுகி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கெட்டுப் போக செய்கிறது. இப்பொருட்களைவாங்கி சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது. ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றார்.