தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'சர்வர்' பிரச்னையால் ரேஷன் கடையில் அவதி

'சர்வர்' பிரச்னையால் ரேஷன் கடையில் அவதி

'சர்வர்' பிரச்னையால் ரேஷன் கடையில் அவதி


ADDED : அக் 13, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு நேற்று முன்தினம் சென்றவர்களுக்கு பாயின்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை சரிவர பதிவாக வில்லை என்ற புகார் எழுந்தது. பொருட்கள் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. பல கடைகளில் பொருட்களை வாங்க வந்தவர்கள் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து விசாரித்ததில் நேற்று முன்தினம் அனைத்து கருவிகளுக்குமான 'சர்வர்' சரிவர வேலை செய்யாததால் பொருட்களை எடைபோட்டு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சரியானதால் ஒருநாளில் 20 முதல் 30 பேருக்கு பொருட்களை வழங்கினர். நேற்றும் இப்பிரச்னை தொடர்ந்ததால் யாருக்கும் பொருள் வினியோகிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாவட்ட வினியோக அலுவலர் முத்துமுருகேச பாண்டியன் கூறுகையில், ''சர்வர் பிரச்னை ஏற்பட்டு வினியோகம் பாதித்தது உண்மைதான். இன்று (நேற்று) மதியம் சரியாகிவிட்டதால் அதன்பின் பாதிப்பில்லை'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us