/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம் விதிக்கப்படும்
/
மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம் விதிக்கப்படும்
ADDED : அக் 18, 2024 05:37 AM
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சியில் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் செல்வக்குமார், கவுன்சிலர் சத்தியபிரகாஷ் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவி யாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். செப்.,26, 27ல் இப்பகுதி ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டது. அப்பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம் விதித்து, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகள் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.