ADDED : ஜன 20, 2026 07:14 AM

சோழவந்தான்: முள்ளிப்பள்ளத்தில் குடிநீர் தொட்டியில் செயல்படும், நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு நாடக மேடை அருகே பல ஆண்டு களுக்கு முன்பு உடைகற்களால் ஆன மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. சேதமடைந்த தாலும் குடிநீர் தேவை அதிகரித்தாலும் பயன் பாடின்றி கைவிடப் பட்டது. இதன் கீழ்ப்புற அறை தற்போது கிராமப்புற நுாலகமாக உள்ளது.
போதுமான வெளிச்சம், காற்றோட்டமின்றி வாச கர்கள் சிரமப்படு கின்றனர். இதனால் தொட்டிக்கு கீழ் அறையில் படிக்கின்றனர். தொட்டி யில் காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய நுாலக கட்டடம் அமைக்க வேண்டும்.
அதிகாரிகளிடம் கேட்ட போது, ''நுாலகத்திற்கு இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும்' என்றனர்.
