ADDED : ஏப் 21, 2026 10:49 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வாசகர் வட்டம் சார்பில் சிறப்புக் கூட்டம் அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் நடந்தது. கவிஞர் ரவி, முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு எழுதிய எழுத்துலகம் பற்றி பேசினார். கவிஞர் ரவி எழுதிய 2 நுால்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம் என்ற திறனாய்வு கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் சண்முகவேலு பேசினார். 'லெட் தவுசண்ட்ஸ் பிளவர்ஸ் புளூம்' என்ற நுாலை பேராசிரியர் ராமமூர்த்தி அறிமுகப்படுத்தினார். நிர்வாகிகள் வாசுகி, அனார்கலி, பாஸ்கரன், கவிஞர் முருகேசன் உட்பட பலர் ஏற்பாடு செய்திருந்தனர். வாசகர் ஜெயசீலன் நன்றி கூறினார்.
