ADDED : பிப் 12, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கொஞ்சோ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் சேலம் வாழப்பாடியில் ஆல் இந்தியா கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் தனுஷ்கா, மஞ்சூர், கிஷோர், லக்சை முகுல், ஹரிஹரசுதன், ரித்தீஷ் பாண்டி, தருணிகா ஏஞ்சல், சாசிகா முதல் பரிசும், இசை பிரியா, கவி பிரியா 2ம் பரிசு பெற்றனர். ஜூனியர் பிரிவில் அகிலா 2ம் பரிசு, அஸ்வின் குமார் 3ம் பரிசு பெற்றனர்.
சூப்பர் ஜூனியர் பிரிவில் ஜெயஸ்ரீ முதல் பரிசும், யாழினி அல்ஜூபில், பத்ரிநாத், முகமது 2ம் பரிசு, ருத்திஸ், பால விநாயக் 3ம் பரிசு பெற்றனர்.
வென்ற மாணவர்களை முதன்மை பயிற்சியாளர் பாலகுரு, பயிற்சியாளர்கள் ஜெகதீசன், பிரவீன், யாழினி, ஜெயஸ்ரீ உட்பட பலரும் பாராட்டினர்.